ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவானது நம் வரலாற்றின் மைல் கல்: அமைச்சர் தங்கம் தென்னரசு
மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை, அரசு விழாவாக கொண்டாடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை என்றும், ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா அரசு விழாவானது நம் வரலாற்றில் மைல் கல் என்று தமிழ் பண்பாட்டு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆடித் திருவாதிரை பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியமாக தருணமாக பார்க்கிறேன். வெளி நாடுகளில் பெரும் படையை நடத்தி தமிழருடைய வீரப் பெருமையை நிலைநாட்டிய மகோன்னதமான அரசர் ராஜேந்திர சோழன். பெருமைக்கு சான்று செய்ய கூடிய கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுப்பிய கோயில் அற்புதகோயிலாக உள்ளது.

மாமன்ன ராஜராஜ சோழன் மகன் என்பது மாத்திரமல்லாமல் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்று உலகசரித்திரத்தில் மாமன்னனாக திகழக் கூடிய, ராஜேந்திர சோழனுடைய பிறந்தநாள் திருநாளில் அரசு விழாவாககொண்டாடப்படும் என அறிவித்திருப்பது மிக பொருத்தமான ஒன்று.
பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் முதலமைச்சர் இதனைக் கருத்தில் கொண்டு அறிவித்திருக்கிறார்கள். அனைவராலும் மகிழ்ச்சியோடு போற்றி பாராட்டக்கூடிய செயலாக அமைந்துள்ளது. வரும் ஆண்டு முதல் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
கோவிட் பெருந்தொற்று காலமாதலால், இந்தாண்டு விழா நடத்துவதில் வாய்ப்பு இல்லமல் உள்ளது. ஊரடங்கு விதிகள் அமல் உள்ளது. இயல்பு நிலை திரும்பியவுடன், சதய விஷாவை கொண்டாடுவதைப் போல ஆடித்திருவாதிரை விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மிக விமரிசையாக விழா கொண்டாட முதலமைச்சர் ஆவன செய்வார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
