Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு..!

தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். ஜூன் மாதத்தில் இருந்து, கொரோனா தொற்று தாக்கம் குறையத் துவங்கியது. ஆனால், சில நாட்களாக மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி நடைமுறையில் இருந்த ஊரடங்கு, 9ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

நோய் பரவல் வேகம் அதிகரிக்கும் முன், அதை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.இதையடுத்து முதல்வர் பிறப்பித்த உத்தரவு, தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடியஊரடங்கு ஆக. 23 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுளளது.

இந்த ஊடங்கின் போது வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க மீன் மற்றும் இறைச்சிகடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத வணிக, நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

செப். 1 தேதி முதல் 9 ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க பள்ளிகல்வி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் மருத்துவம் சார்ந்த கல்லூரி கல்வி நிறுவனங்கள் வரும் 16 ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வழி காட்டு நெறி முறைகளை கடுமயைாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.