மறைந்த மதுசூதனன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தியது ஏன்? ஜெயக்குமார் கூறிய காரணம் இதுதான்?
அதிமுகவின் முக்கியமான தூண்களில் ஒன்றாக விளங்கக்கூடியவரும், வட சென்னையில் எம்.ஜிஆர் மன்றத்தின் செயல்பாடுகளை முடுக்கிவிட்டுவர் மதுசூதனன் என்றும் அதிமுக இயக்கத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தபோது, வட சென்னையில் கட்சியை வளர்த்தவர் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மதுசூதனனின் 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை என்பது அதிமுகவின் வளர்ச்சிக்காக இருந்ததாக குறிப்பிட்ட அவர், அவரது மறைவு, கழக சகோதரர்கள் மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம். அதிமுக கழகத்தை வளர்த்த மாபெறும் தூண் இன்றைக்கு மறைந்துவிட்டது. அவரது இறப்பு கழகத்திற்கு பேரிடியாகவும், பேரதிர்ச்சியாக உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, நல்லது கெட்டது விஷயங்களில் கலந்து கொள்வது என்பது தமிழர்களின் பண்பாடு என்று ஜெயக்குமார் கூறினார்.
