இந்தியா

கோவாக்சின் போட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.எம்.ஆரின் ஆய்வு முடிவுகள்..! முழுவிவரம் இதோ…

இந்தியாவில் கொரோனா எனும் கொடிய வைரஸின் இரண்டாம் அலை ஏற்படக் காரணமாக இருந்த டெல்டா வகை கொரோனா டெல்டா பிளஸ் ஆக மரபணு மாற்றமடைந்து பரவி வருகிறது.

இந்த வகை வைரஸால் அதிகரித்த பரவல் தன்மை, நுரையீரல் உயிரணு ஏற்பிகளுடன் வலுவான பிணைப்பு, மோனோக்ளோனல் ஆன்டிபாடியின் செயல்திறன் குறைவது ஆகியவற்றை டெல்டா ப்ளஸ் கொரோனாவின் தன்மையாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுவரை நாட்டில் 70 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டெல்டா பிளஸ் புதிய மாறுபாடு என்பதால், அதற்கு எதிராக தற்போது பயன்பாட்டிலுள்ள தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியிலும் ஆராச்சியாளர்கள் மத்தியிலும் நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தங்களது ஆய்வு ஒன்றில் கோவாக்சின் தடுப்பூசி, டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராகச் செயல்படுவது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பது மூன்றாம் கட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.எம்.ஆர் இன் இந்த ஆய்வு முடிவுகள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது