விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து…

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, வெண்கலப் பதக்கம் பெற்றதற்கு, குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹி பிங்ஜியோவை வீழ்த்தியதை அடுத்து, பி.வி.சிந்து வெண்கலப்பதக்கத்தை ப்பெற்றார். 21-க்கு 13, 21-க்கு 15 என்ற செட் கணக்கில் சீன வீரங்கனையை பி.வி.சிந்து வீழ்த்தி வெற்றி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டுவிட்டரில் பி.வி.சிந்து பெருமைக்குரியவர் என பாராட்டி பதிவு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி மூலம் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்து செய்தியில், நாட்டிற்காக மேலும் பல காரணங்களை பி.வி.சிந்து வெல்ல தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பி.வி.சிந்து, வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், தற்போது இந்தியா இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.