அரசியல்தமிழ்நாடு

உண்ணாவிரதத்துக்கு தடை விதித்தால் தடையை மீறி போராடுவோம்… ஹெச்.ராஜா ஆவேசம்…

உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா, தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுபேசிய அவர் பிற்படுத்தபப்ட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வந்துள்ளது என்றும், திமுக சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுவதாகவும் கூறினார். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது பாஜகதான் என்றார்.

தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என்றும் பேசினார். பாஜகவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தடை விதித்தால் விவசாயிகளின் துரோகி திமுக என்று நிரூபணம் ஆகி விடும் என தெரிவித்தார்.

கல்வி, கயவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் பாடநூல் தலைவர் கோமாளி லியோனி, சுப.வீரபாண்டியன் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இது போன்றவர்களை நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று ஹெச் ராஜா கூறினார்.