Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,178 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,897 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,74,46,148 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,103 பேர் ஆண்கள், 883 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,95,354 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,64,205 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,178 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,04,805 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.