டோக்கியோ ஒலிம்பிக் : அரையிறுதியில் தோல்வியடைந்தார் இந்திய வீராங்கனை சிந்து..!
டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வியடைந்தார்.
ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்-7’ இந்தியாவின் சிந்து, உலகின் ‘நம்பர்-1’ சீன தைபேயின் தய் டிசு யிங் மோதினர். முதல் செட்டை 18-21 என இழந்த சிந்து, 2வது செட்டை 12-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்ட சிந்து அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
