டோக்கியோ ஒலிம்பிக் : ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் போட்டியில் மகளிர் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்தது இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அற்புதமாக விளையாடிய இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.
