மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்… அண்ணாமலை கூற்று பற்றி கவலையில்லை… கர்நாடக முதல்வர் திட்டவட்டம்…
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று தமிழகம் சார்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது என்றும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகாவின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க தமிழக பாஜக அனுமதிக்காது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பதிலளித்த பசவராஜ் பொம்மை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி கவலையில்லை என்றும், பதிலளிப்பது என்னுடைய வேலையும் அல்ல என்று கூறியுள்ளார்.
காவிரியில் கர்நாடகாவுக்கும் உரிமை உள்ளது என்றும் அணை கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
