கால் எலும்பு முறிந்த கட்சி தொண்டருக்கு மனிதாபிமானத்தோடு உதவிய அண்ணாமலை… நெகிழ்ந்த தொண்டர்…
சமீபத்தில் திருச்சி மாநகருக்கு சென்ற அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, கேமராமேன் ஒருவர் விழுந்ததில் லட்சுமணன் என்கிற பாஜக தொண்டரின் கால் எலும்பு முறிந்து விட்டது.
இதை அறிந்த அண்ணாமலை, பாஜக தொண்டர் லட்சுமணனை, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை
அளித்தனர். லட்சுமணனின் மருத்துவ செலவுகளை, பாஜக மருத்துவர் அணியின் மாநில தலைவர் டாக்டர் விஜயபாண்டியன் ஏற்றுக் கொண்டார்.
மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு, விடு திரும்பிய லட்சுமணனுக்கு, கட்சி நிர்வாகிகள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தனர். குடும்பத்திற்குத் தேவையான உதவிகளையும் அவர்கள் செய்து கொடுத்தனர்.
கட்சி சார்பில் தனக்கு வழங்கப்பட்ட உதவியால் நெகிழ்ந்துபோன லட்சுமணன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். தொண்டருக்கு மனிதாபிமானத்தோடு உதவிய அண்ணாமலையின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
