கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் துவக்கி வைத்தார்…
தமிழகத்தில் கொரேனா விழிப்புணவு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் கூடுதலாக தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தித வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நெறிமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம் சேர்வது காணப்பட்டால் அந்த பகுதியை மூட ஆட்சியர், ஆணையர் மூட முடிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
முகக்கவசம் இன்றியும், சமூக இடைவெளி பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குமேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வணிக நிறுவனங்களில் கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கொரோனா 3-வது அலையைத் தவிர்க்க கூடுதல் விழிப்பணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா 3-வது அலை அச்சுறுத்தும் சூழல் உள்ள நிலையில் அதை தவிர்க்கும் நோக்கில், கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோன மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த குறும்படத்தை முதலமைச்சர் வெளியிட்டார்.
பிரச்சாரத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். பின்னர் மக்கள் நல்வாழ்வு துறையால் தயார் செய்யப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை அவர் பார்வையிட்டார். விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பிரச்சார வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
