தமிழ்நாடு

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா..! தமிழக முதல்வரின் கம்பீர உரை..!

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று முதலில் அரசு மரியாதையை ஏற்று கொண்டார் .

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது :

உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும்

மற்ற குற்றங்களை விட தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன
நவீன வழிமுறைகளை கண்டறிந்து சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்

புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக வைத்து கொண்டு எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல் பட வேண்டும் என்று கூறினார்