இந்தியா

பெகாசஸ் விவகாரம்… நாடாளுமன்றம் 8-வது நாளாக முடங்கியது…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து, வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு, பெகாசஸ் விவகாரம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க முயன்ற தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரின் கையில் இருந்த ஆவணங்களையும் கிழித்தும், எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது. எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து மக்களவை 11.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தர். இதேபோல் எதிர்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாண்பை கலங்கப்படுத்தும் உறுப்பினர்கள் மீத நடவடிக்கை எடுக்க வேண்டய கட்டாயம் உருவாகியுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு கூட்டத்தொடர் வரையில் எதிர்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.