மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்… கிருஷ்ணகிரியில் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக அமைச்சர் தகவல்…
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் தொடங்க உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக, எந்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை என்றும் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில், மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதியையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படவில்லை என்றும், பால் விலை குறைக்கப்படவில்லை என்றம், அதிமக தேர்தல் அறிக்கையில் சொன்னதை இதுவரை செய்யவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான விவகாரங்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு கொடுக்கும் யோசனைகள் எதுவும் ஏற்கும் வகையில் இல்லை என்றார். மதுரை எய்ம்ஸ் அலுவலகம் தொடர்பாக மத்திய அரசு சொல்லும் இடங்கள் சரியாக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
