அரசியல்

“அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்”… எடப்பாடி பழனிசாமி உள்பட 90 பேர் மீது வழக்கு பதிவு…

கொரோனா விதிமுறை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது சேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், போடியில் முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் அரசு ஊரடங்கு நீட்டித்துள்ளது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

மீது, சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்பட 90 பேர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.