தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனையிலும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையும், சிஐஐ இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகதியில் அந்த பகுதியில் சமூக மேம்பாட்டிற்காக செலவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஹூண்டாய், கெவின்கேர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி, தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக துவக்கப்பட்டுள்ளது. 136 தனியார் மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்பு நிதியுடன் இந்தம் திட்டம் செயலபடுத்தப்படும் என்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி சுமார் 600 ரூபாய் உள்ள நிலையில், அவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில், இலவச கொரோனா தடுப்பூசி திட்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
