தமிழக அரசு பாதை மாறி பயணிக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவின் பகல் கனவு பலிக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருமங்கலம் அம்மா கோயிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகமார், கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக திசை மாறுகிறது என்றம், திமுகவில் நிர்வாக சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் வரும் 28 ஆம் தேதி போராட்டம் நடத்த அதிமுக தலைமை அறிவித்துள்ளதாக கூறினார்.
விடியலைத் தருவோம் என்று கூறி திமுக அரசு மக்களை வஞ்சித்துவிட்டது என்றும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தவர்கள், வாக்களித்த மக்களை வஞ்சித்துள்ளதாகவும் கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் மலிவான அரசியலில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், அதிமுவை அழிக்க நினைக்கும் திமுகவின் பகல் கனவு பலிக்காது என்றார்.
அதிமுக ஆட்சியின் சாதனை திட்டங்களை மக்களிடம் கூறினோம். தற்போது எதிர்கட்சியாக இருக்கிறோம். அரசின் ஏமாற்று நாடகத்தை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
