முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு…
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகங்களில் ஊழல் நடந்ததாக புகார் வந்தது. கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்று காலை முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னையில் உள்ள வீடு மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 20 இடங்களில் லஞ்ச ஒழிப்ப துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கரூரில் 21 இடங்களில் 21 டிஎஸ்பிக்கள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சோதனை காரணமாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்படுவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
