சினிமா

“ஏ.ஆர். ரஹ்மான் யார் என்றே தெரியாது என்ற நடிகர் பாலகிருஷ்ணா”… கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்…

பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுபடுத்திப் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா, அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் அப்போது பேட்டி எடுப்பவர், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாணி உள்ளது. பலர் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் கவனித்ததில்லை. வருடத்துக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பார். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. பாரத ரத்னா விருது எல்லாம் என்.டி.ஆரின் கால் விரல் நகத்துக்கு சமம் என்று சொன்னதாக கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருதுபெற்ற உலக அளவில் புகழ்பெற்ற இந்தியரான ஏ.ஆர்.ரஹ்மானை யாரேன்றே தெரியாது என்று பாலகிருஷ்ணா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தயுள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள், பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானை எனக்கு யார் என்றெ தெரியாது என கூறிய உங்களை எங்களுக்கு தெரியும். ரயிலே உங்களைக் கண்டா பயந்து பின்னாடி போகும் என்று நெட்டிசன்கள் பலவாறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

1993 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியாந நிப்பு ராவா என்ற படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். ஆனாலும், ஏ.ஆர் ரஹ்மான் யாரென்று தெரியாது என்று பாலகிருஷ்ணா கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாலகிருஷ்ணாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.