உலகம்

உலகின் அதிக விஷமுள்ள பாம்புக்கு முத்தம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி…! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்….!

பாம்பு விஷத்தை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி தன் உடலில் இருப்பதாக கூறியவர், உலகின் மிக கொடிய விஷ பாம்புகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் கோப்ரா கடித்து உயிரிழந்த சம்பவம் பிலிப்பைன்சில் நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்டோ அல்வேரிஸ் (62) பாம்பு பிடிப்பதில் வல்லவர். கொடிய விஷ பாம்புகளை மக்கள் கூட்டத்துக்கு முன்னர் பிடித்து வித்தை காட்டி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவார். பெர்னார்டோவை, பாம்பு மனிதன் என்றே அழைக்கப்பட்டார்.

தனதுக்கு பாம்பு விஷத்தை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் பெர்னார்டோ அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில், மங்கல்டன் பகதியில் கொடிய விஷம் கொண்ட Northern Philippine cobra என்ற நாகப்பாம்பு வகையையை, தனது கையில் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

பின்னர், விஷப்பாம்புக்கு அவர் முத்தம் கொடுக்க முயன்றார். அப்போது நாகப்பாம்பு, பெர்னார்டோவின் நாக்கில் கொத்தியது. இதனால் வலி தாங்க முடியாத கத்திய பெர்னார்டோ, கீழே சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெர்னார்டோவை மருத்துவர்கள் காப்பாற்ற முயன்றபோதும் அவர்களால் முடியவில்லை. அவரது உடல் முழுவதும பாம்பு விஷம் பரவியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.