ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் ரூ.3,497 கோடி மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்திய ‘ரிலையன்ஸ்’ நிறுவனம்..!
அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் நிறுவனம்,” ஜஸ்ட் டயல்” நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அதன்படி, ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 3 ஆயிரத்து 497 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த உள்ளது.
ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்த உள்ளதாகவும் ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
