தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…
புதுச்சேரியைப் போன்று தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்க தரப்படும் என்றும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது, மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி பயின்று வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியைப் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் ஆய்வு செய்து அவர் கூறும் வழிவகைகளைப் பின்பற்றுவோம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் 9, 10, 11 வகுப்புகளுக்கு 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதாக செய்திகள் வெளியானது. புதுச்சேரியைப் போன்று தமிழகத்திலும், கொரேனா சூழலைப் பொருத்து பள்ளிகள் திறக்க முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும், முதலமைச்சர்கூறும் வழிவகைகளைப் பின்பற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
