அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்க மாணவர்களுக்கு பயிற்சி அளியுங்கள்:… எடப்பாடி பழனிசாமி டுவிட்…

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எழுப்பிய சந்தேகத்தால் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்து குழப்பம் நிலவியது. இந்த நிலையில் தமிழகத்திலும் உறுதியாக நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை என்றும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தில், எங்கேயாவது சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்றும் அதனால் குழந்தைகளும் பெற்றோர் சங்கடமடையக் கூடாது என்பதற்காகத்தான் மாணவர்களை படிக்க சொல்வதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதலமைச்சரிடம் வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன் விளைவாக மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

எப்போதும் தேர்தல் வாகுகுறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, அதிமுக அரசு செயல்படுத்திய நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவபர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.