நீட் ஆய்வு குழு அமைத்தது செல்லும்… கரு.நாகராஜனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு எதிராக பாஜகவின் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனை எதிர்த்து, தமிழக பாஜக பொது செயலாளர் கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைத்திருப்பதாக, கரு நாகராஜன் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வுபாதிப்பு குறித்து அராய தமிழக அரசு அமைத்து குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. நீட் தாக்கம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். நீட் தாக்கம் பற்றி ஆராய அமைத்த குழுவின் நியமனம், விண் செலவு என கூற முடியாது என்றும் நீதிபதி கூறினார்.
மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு எதிராக குழு இல்லை என்றும், மக்கள் கருத்து கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
