Uncategorized

பெண் பயணிகளுக்கு இனி இலவச டிக்கெட் விநியோகம்… போக்குவரத்து துறை அறிவிப்பு…

வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இனி இலவச டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் அமர்ந்த முதல்நாளே பண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் பிற போர்டுகள் கொண்ட பெருந்துகளில் பெண்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனாலும், சென்னையில் காணப்படும் பெரும்பாலானவை, வெள்ளை போர்டு கொண்டிருப்பதில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து வந்த நிலையில், தற்போது பெயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனைப்பேர் பயணிக்கின்றனர் என்பதை கண்டறிய இந்த முடிவெடுத்திருப்பதாக போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், நடத்துனரிடம் இலவச டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.