Uncategorized

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்… கர்நாடகம் பிடிவாதம்…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், 3 முக்கிய திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும் என்றும், மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேலும், பிரச்சனைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்தால் மேகதாது அணையை நிறுத்த எந்த காரணமும் இல்லை என்றார்.

மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.