தமிழ்நாடு

புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கப்படும்… தமிழக அரசு அறிவிப்பு…

புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தற்போது புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்த நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்து தேர்வுகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.