Uncategorizedதமிழ்நாடு

தமிழக பாடபுத்தகத்திலும் இனி “ஒன்றிய அரசு”தான்… அதிரடி காட்டும் திண்டுக்கல் ஐ.லியோனி…

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, மரியாதை நிமித்தமாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022 முதல் தமிழக அரசின் பள்ளி பாட புத்தகங்களில், மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என்று தெரிவித்தார். பாட புத்தகங்கள் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை முதலமைச்சர்,

அமைச்சர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பாஜக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவத்து வரும் நிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுனம் தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, பாடபுத்தகங்களில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என்று அறிவித்துள்ளார்.