ஒலிம்பிக்கில் ஆடவர் தொடர் ஓட்ட அணி நிச்சயம் பதக்கம் வெல்லும்… தமிழக வீரர் நம்பிக்கை…
ஒலிம்பிக் ஆடவர் தொடர் ஓட்டத்தில் நிச்சயம் பதக்கம் வெல்வோம் என்று ஒலிம்பிக் தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆடவர் தொடர் ஓட்ட அணி வீரர் ஆரோக்கியராஜிவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பான், டோக்கியோ நகரில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. 2021 ஒலிம்பிக் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியராஜி தகுதி பெற்றுள்ளார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியராஜிவ் பங்கேற்க உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றது சந்தோஷத்தை அளிப்பதாக கூறினார். நீண்ட நாட்களாக, கடின பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளதாக கூறினார்.

கொரோனா காலகட்டத்தில் எந்தவொரு பிரச்சனை வந்தாலும், பல்வேறு முயற்சி மேற்கொண்டு போட்டியில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றதாக கூறினார். எங்கள் குழு தகுதி வாய்ந்ததாக உள்ளது என்றும் இந்த வருடம் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆரோக்கியராஜிவ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற அனுபவம் பெற்றவர்.
