எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கும் தகுதி யாருக்கும் இல்லை… சசிகலாவுக்கு எதிராக கொதித்தெழுந்த எம்ஜிஆர் மன்றத்தினர்…
சசிகலாவுக்கு ஆதரவாகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வரும் நிலையில், மதுரையில் சசிகலாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடி வரும் சசிகலாவுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்கடிளல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதிமுகவினருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதிமுகவை மீட்போம், தொண்டர்களைக் காப்போம் என்று தொலைபேசி உரையாடலின்போது சசிகலா கூறிவருகிறார்.
சமீபத்தில் அதிமுக தொண்டருடன் பேசிய சசிகலா, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அவரது பேச்சு, முன்னாள் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவத்தனர். அதற்கு, சிறு வயதினராக இருந்தாலும், வெளியில் நடப்பவை குறித்து எம்ஜிஆரிடம் தெரிவிப்பேன் என்றும் ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான் இதை கூறினேன் என்றும் சசிகலா விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக மதுரை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அண்ணா அவர்களை ஆட்சியில் அமர வைத்தவர். 3 முறை தொடர்ந்து ஆட்சி அமைத்து வெற்றி சரித்திரம் படைத்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் கருவாடு மீனாகாது; கறந்த பால் மடி புகாது. புரட்சி தலைவரின் புகழையும் இயக்கத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது. துரோகத்தை வீழ்த்துவோம். எதிரிகளை முறியடித்து புதிய வரலாறு படைப்போம் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
