அரசியல்தமிழ்நாடு

சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதலமைச்சர் ஆவதற்கு முன்பு, மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது எந்தவொரு பாதுகாப்பும் இன்றி அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்தார்.

சைக்கிள் பயணத்தின்போது பொதுமக்களுடன் செல்பி எடுப்பதையும், அவர்களுடன் பேசுவதையும் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

முதலமைச்சரானபிறகு மு.க.ஸ்டாலின் முதன் முறையாக இன்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்பிற்காக போலீசார் அவருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வந்த மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்தார்.

மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணத்தின்போது அவர் மக்களையும் சந்தித்து பேசினார். இளைஞர்கள் பலரும் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தற்போது, இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.,