5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…
வளிமண்டலம் மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வும் மையம், இலங்கை மீது நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்திற்கு 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது. இது அடுத்த 5 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்து.
நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுவை – காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் 5 ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பகள் இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்துள்ள நிலையில், வரக்கூடிய 4 நாட்களுக்குப் பிறகு காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் காற்றின் திசை வேகம் மாறுபாடு காரணமாக மேற்கு மலை தொடர்ச்சி மலையில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மன்னார்வளைகூகுடா பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நாளை தினம் வரை மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 53 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்குள் வரும் 7 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
