“விளம்பரத்துக்காகவே பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது”… நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு…
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்து. நீட் தேர்வு குறித்து, பெற்றோர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துக்களை ஆய்வுகுழுவிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசைணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அரசு பள்ளிமாணவர்கள், தமிழ் வழியில் படித்தோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆய்வு செய்யவே குழு அமைக்கப்பட்டதாகவும், நீட் தாக்கம் பற்றி ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், பாஜக வழக்கு தொடர்ந்திரப்பது, ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்றும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டே குழு அமைக்கப்பட்டுள்ளதென்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறவில்லை என்றும் மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழக பாஜக பொது செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
