கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதலிடம்… ஆய்வில் தகவல்…
கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமான நிலையில், அதை கட்டுப்படுத்தும் பணியில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வரும் நிலையில் அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து. கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக மருத்துவ துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தனியார் அமைப்பு ஒன்று மாநில மக்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனா இரண்டாவது அலையை கையாண்டதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதாக வெளியாகி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலையை தமிழக அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியதாக 59 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதற்கு, மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக இருந்ததே காரணம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஆந்திர அரசு 54 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச அரசு 51 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவாக 47 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் மிகவும் குறைந்தபட்சமாக மேற்கு வங்கம், 17 சதவிகிதம் பேர் மட்டும் மாநில அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
