அரசியல்தமிழ்நாடு

“விவசாயிகளுக்கு தரமான விதைநெல் வழங்க வேண்டும்”… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…

திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும், தரமான நெல்மணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், டெல்டா விவசாயிகளுக்கு தரமான விதைநெல் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்குபல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகளை அளித்து வேளாண் பெருமக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியதாக தெரிவித்துள்ளர். தொடர்ந்து அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதைநெல் மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் நடவு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருவையாறு அருகே விவசாயி வீரமணி, தனது 9 ஏக்கர் நிலத்தில் தனியாரிடம் இருந்து ஏ.டி. 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளார் என்றம் மீதமுள்ள 2 ஏக்கர் நிலத்தில் செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ 51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்ததாகவும் ஏறத்தாழ 12 நாட்கள் ஆகியும் திமுக அரசு வழங்கிய விதைகள் முளைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் விவசாயி வீரமணி புகார் அளித்தும், உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளர்.