புதிய ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு… கமல் ஹாசனை தொடர்ந்து சூர்யா எதிர்ப்பு…
மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக என்றும் அதன் குரல் வளையை நெரிப்பதற்காக அல்ல என்றும் சூர்யா கூறியுள்ளார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி மத்திய அரசின் 1952 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட சட்ட வரைவில் சில திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதையும் புதிதாக சில அம்சங்களைச் சேர்க்க இருப்பதாக அறிவித்தது. புதிய ஒளிபரப்பு வரைவு சட்டத்தில், தணிக்கை வாரியத்தால் மட்டுமே திரைப்படங்களுக்கான உச்ச அதிகாரம் வழங்குதல், திருத்துதல் போன்ற அதிகாரங்கள் இருந்தன. இனி தணிக்கை வாரியத்தால் சான்று வழங்கப்பட்டு வெளியான திரப்படத்தின் மீது பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில், மத்திய அரசு அந்த சான்றிழ்கள் குறித்த முடிவுகள் எடுப்பதற்கான உச்ச அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என்ற வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
1952 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட வரைவின்படி, ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கினால், அது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் இனி லைஃப் டைம் சான்றிதழாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கதை திருட்டு, திரைப்பட திருட்டு போன்றவற்றிற்கு தண்டனை ஏதும் இல்லாத நிலையில், தற்போது புதிய வரைவில் 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழி வகை செய்கிறது.
திரைப்பட தணிக்கை சான்றிதழில் மத்திய அரசுக்கு உச்ச அதிகாரம் இருப்பதற்கு திரைப்பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடிகர் கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக என்றும் அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள் என்றம் உடனே உங்களின் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
