கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார்..! சர்ச்சையை கிளப்பும் சசிகலாவின் புதிய ஆடியோ !
ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்று அண்மையில் விடுதலையான சசிகலா தற்போது தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். சசிகலாவுடன் பேசும் அதிமுக நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றன .இதனால் அதிமுகவில் பெரும் பிரளயமே வெடித்துக்கொண்டிருக்கிறது
இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார்.
மேலும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். பிரிந்திருக்கக் கூடாது. அதிமுகவை கைப்பற்ற வேண்டியதில்லை அது நமது கட்சி எனத் தெரிவித்துள்ளார்.
