தமிழ்நாடு

தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக்கொண்டார் சைலேந்திர பாபு..!

தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு பிரிவு டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம், இன்றுடன் (ஜூன் 30) முடிவடைகிறது. இதையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்

சைலேந்திர பாபுவிடம் முறைப்படி இன்று பொறுப்புகளை ஒப்படைத்தார் ஜே.கே.திரிபாதி. புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்பட்ட சைலேந்திர பாபுவுக்கு திரிபாதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சைலேந்திர பாபு 1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் பிறந்தார். தமிழக விவசாய கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை ஆய்வுப்பிரிவில் முதுகலை மேல்படிப்பும் முடித்தார்.

இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டில் சேர்ந்த சைலேந்திர பாபு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து இன்று டிஜிபியாக பதவியேற்றுள்ளார்.