Covid19உலகம்

சுவாசம் மூலம் கொரோனா கண்டறியும் நவீன முகக்கவசம்… ஹார்வார்டு விஞ்ஞானிகள் அசத்தல்…

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியும் பரிசோதனை முறையை எளிமையாக்கும் வகையில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முறையை எளிமையாக்கும் வகையில், அபுதாபியில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஃபேஷியல் ஸ்கேனரைக் கொண்டு கொரோனா பாதிப்பு கண்டறியும் முறையை இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்களில் தற்போது, ஃபேஷியல் ஸ்கேனர் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிக்கேஷனை கொண்டு ஒருவரை ஸ்கேன் செய்து சில விநாடிகளில் கொரோனா தொற்று உள்ளதா? இல்லையாஈ? என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில் கொரோனாவைக் கண்டறியும் நவீன முகக்கவசத்தை ஹார்வார்டு பல்லைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வகை முகக்கவசத்தை 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக அணிந்த பிறகு, 90 நிமிடங்களுக்குப் பின் சுவாசத்தின் மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முகக்கவசத்தில் உள்ள சென்சார் மூலமாக எளிதில் கொரோணாவை கண்டறிவதாகவும், குறைந்த செலவில் கொரோனாவை வேகமாக கண்டறிய முடியும் என்கின்றனர் ஹார்வார்டு பல்லைக்கழக விஞ்ஞானிகள்.