சினிமா

மனைவியின் நைட்டி அணிந்து போஸ் கொடுத்த பிரபல நடிகர்… வைரல் புகைப்படம்…!

நடிகர் நகுல் தனது மனைவியின் நைட்டியை அணிந்து இணையத்தில் வெளியிட்டுள்ள படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் நகுல், தனது மகள் அகிராவுடன் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் மகள் அணிந்திருக்கும் உடை போலவே நகுலும் உடை அணிந்துள்ளார். அகிராவின் அம்மா மட்டும்தான் அவரைப்போல உடைகள் அணிந்துகொண்டே இருக்க வேண்டுமா? பதிவிட்டுள்ளார்.

உடையில் பாலின பாகுபாடு இருக்க வேண்டாம் என்றும் இரு பாலினத்தவர்களும் பயன்படுத்துமாறு ஆடைகள் வர வேண்டும் என்றும் நகுல் மனைவி கோரிக்கை விடுத்துள்ளர்.

நடிகர் நகுலின் இந்த புகைப்படத்தை, தொலைக்காட்சி தொகுப்பாளரான சாகித்யா ஜெகநாதன் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இது உண்மையில் அற்புதமான செயல். நகுல்தான் ஒரு ஆண் என்று கருதாமல் மனைவியின் நைட்டியை திருடி போட்டுக் கொள்கிறார் என்றும் இந்த மாதிரியான நபர்கள் மீது அன்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் நகுல், தற்போது எரியும் கண்ணாடி என்கிற படத்தில் நடித்து வருகிறார் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா நடித்து வருகிறார்.