தமிழ்நாடு

பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து… பெண் ஒருவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பரிதாபம்…

சென்னை, கோயம்பேடு பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண் ஒருவர் உடல் கருகி உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி சாலையில் இருந்து நூறடி சாலையை இணைக்கும் பாலத்தில் ஏறிய காரில், பெண் ஒருவர் பயணித்து வந்துள்ளார். இந்த கார், நூறடி சாலையில் இறங்கி கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. காரை நிறுத்தும்படி அருகில் வந்த வாகன ஓட்டிகள் கூச்சலிட்டனர். இந்த நிலையில் காரில் தீ பரவியது. தீ விபத்து காரணமாக காரி அருகில் யாரும் செல்ல முடியவில்லை. ஓட்டுநர் மட்டுமே கார் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். ஆனால் பின் இருக்கையில் இருந்த பெண்ணால், கார் கதவை திறக்க முடியாததால் அவரால் தப்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்குள் காரில் முழுவதுமாக எரிந்தது. தீ விபத்து குறித்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். பின்னர், ஆனால் காரில் பயணித்த பெண் உடல் கருகி உயிரிழந்தார். காரில் பயணித்த பெண், எலும்புக்கூடாகத்தான் மீட்கப்பட்டார். பின்னர் அங்கு வந்த கோயம்பேடு போலீசார், மீட்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்தில் கருகி உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கோயம்போடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஒருவர் தீ விபத்தில் சிக்கி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.