மக்கள் நீதி மய்யம் : புதிய உயர்மட்ட நிர்வாகிகளை இன்று அறிவிக்கிறார் கமல்ஹாசன் ! முக்கிய புள்ளிகள் இடம்பெற வாய்ப்பு என தகவல்…
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான புதிய உயர்மட்ட நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து சர சரமாய் விலகினர்.
நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியதை குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தன் அரசியல் பயணத்தை ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்தார் விலகிய அவர்களை தனது வாய் வித்தையால் வசைபாடவும் செய்தார் .
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது .
