தமிழ்நாடு

ஜூன் 28 முதல் பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…

ஜூன் 28 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை அடுத்து, வரும் 5 ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 23 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், தஞ்சை, ஈரோடு சேலம், நாமக்கல், கரூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து மீதம் உள்ள 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.