Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 150 பேர் உயிரிழந்து உள்ளனர். 8,132 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது சற்று ஆறுதல் தருகிறது. சென்னையில் 44 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 71,117 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,55,332 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,20,17,144 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனாஉறுதியானவர்களில் 3,297 பேர் ஆண்கள், 2,458 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,35,730 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,19,564 ஆகவும் அதிகரித்து உள்ளது. 8,132 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,75,963 ஆக உயர்ந்துள்ளது.

150 பேர் கொரோனாபாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 55 பேர் தனியார் மருத்துவமனையிலும், 95 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.