Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 5 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு! என்னென்ன தளர்வுகள் முழு விவரம் இதோ…

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மே 24ந்தேதியில் இருந்து 31ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 28ந்தேதி முடிகிறது.

இந்நிலையில் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழகத்தில் வருகிற ஜூலை 5ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

புதிய தளர்வுகள் :

  • தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி.
  • திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை.
  • தொற்று குறைந்த மாவட்டங்களிடையே திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்ல இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம் .திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மத வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி.
  • அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை.
  • அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி
  • தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி!