தமிழ்நாடு

அடுக்கடுக்காய் வந்த புகார்கள்! கிஷோர் கே சாமி மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

அரசியலையும் அரசியல் தலைவர்களையும் வாய் வித்தையால் வச்சு செய்த கிஷோர் கே.சாமியை தற்போது புகார் மேல் புகார் போட்டு குண்டர் சட்டம் சிறப்பான செய்கையை செய்துள்ளது .

திமுக குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றியும் தவறான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது . இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து சங்கர் நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Famous actress lodges police complaint against Kishore K Swamy - Tamil News  - IndiaGlitz.com

இதையடுத்து பெண் பத்திரிக்கையாளர் பற்றி ஆபாசக் கருத்துக்களை அவர் பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமியை இரண்டாவது முறையாக கைது செய்தனர். பின்னர், நடிகை ரோகிணி உட்பட 3 பேர் தொலைக்காட்சி நபர் ஒருவருக்கு கிஷோர் கே.சாமி மிரட்டல் விடுத்ததாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.