தமிழ்நாடு

எங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் ! ஜூன் 30-ல் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

முன்கள பணியாளர்களாக தங்களை அறிவிக்கக்கோரி ஜூன் 30-ல் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்த அறிவித்துள்ளனர்.

கொரோனா என்னும் பெருந்தொற்றை பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று ஊழியர்கள் சமையல் சிலிண்டர் விநியோகித்து வருகின்றனர். தமிழக அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் ஊடகத்தினர் உள்ளிட்ட பல துறை சார்ந்தவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தது.

இந்நிலையில் தங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 30-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர் என்றும் தொழிலாளர் சங்க நிர்வாகி நடராஜன் தெரிவித்துள்ளார்.