போலீஸ் சிகிச்சையால் உயிர் பிழைத்த இளைஞர்… போலீசாருக்கு குவியும் பாராட்டு…
சாலையில் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மூச்சுப்பேச்சற்ற நிலையில், போலீசார் ஒருவர் அளித்த முதலுதவி சிகிச்சையால் அவர் மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது-
தெலங்கானாவில் உள்ள கரீம் நகரைச் சேர்ந்த அப்துல் கான். இவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சாலையில் விழுந்தார்.
அவரது இதய துடிப்பு நின்று போனது. பொதுமக்கள் யாரும் செய்வதறியாது நின்றிருந்த வேளையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அப்துல்கானின் நெஞ்சு பகுதியில் கையை வைத்து அழுத்தி முதலுதவி செய்தார்.
சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு, மயக்கமடைந்த அப்துல் கானுக்கு சுயநினைவு திரும்பியது. இதையடுத்து, அப்துல் கான் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் உயிர் பிழைத்தார்.
இது தொடர்பான விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் கலீலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
