அரசியல்

ஆளுநர் உரை “இனிக்கும் இளநீர் அல்ல கானல் நீர்”… முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விமர்சனம்…

தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், முன்னாள் சுகாதார துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது, நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியது என்றும், அதன்படி தற்போது நீட் தேர்வு உண்டா? இல்லையா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்றும், ஆளுநர் உரை இனிக்கும் இளநீராக இல்லாமல் கானல் நீராக காட்சி அளிப்பதாக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் விமர்சித்தார்.